குவைத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் இவர்கள் வெளியே செல்லலாம்:
குவைத்,அக்-18-2020
குவைத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து குவைத் திரும்பி தனிமைப்படுத்தலில் தங்கியிருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மீண்டும் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தடை விதிக்கப்படமாட்டார்கள் எனறு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்(CAA) இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைக் கூறியுள்ளது.
அதன்படி, வெளிநாட்டிலிருந்து வந்தபின், அந்த நபரின் 14 நாள் தனிமைப்படுத்தலின் போது, தேவைப்பட்டால் அவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் இருப்பினும், அவர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் சான்றிதழை வழங்க வேண்டும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இது தேவை.
அதே நேரத்தில், விமான நிலைய கட்டிடத்திற்குள் நுழையும் அனைவருக்கும் அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ளவர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.ண
விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொருவரும் முகமூடி, கையுறைகள் போன்றவற்றை அணிவதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள். தடைசெய்யப்பட்ட 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேறு நாட்டில் 14 நாட்களுக்கு தங்கியிருந்த பிறகு நாட்டிற்குள் நுழையலாம். தற்போது, இது தொடர்பாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று பிரபல தினசரி நாளிதழ் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.