குவைத் மற்றும் ஜசிரா ஏர்வேஸ் நிறுவனங்களின் அதிகாரிகள் இன்று சுகாதார அமைச்சர் பாஸல்-அல்-சபாவை சந்தித்தனர்:
அக்டோபர்-22,2020
தடை விதிக்கப்பட்டுள்ள 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகள்(தொழிலாளர்கள்) குவைத்துக்குள் நேரடியாக நுழைவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை பரிசீலிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் பாஸல்-அல்-சபா உறுதியளித்ததாக குவைத் ஏர்வேஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் படி அமைச்சரிடமிருந்து நல்ல வரவேற்பையும் ஒத்துழைப்பும் கிடைத்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க விமான நிறுவனங்கள் முன்வைத்த வழிகாட்டுதல்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு ஆராயும் என்று அமைச்சர் உறுதியளித்தார் என்று குவைத் ஏர்வேஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவைத்தின் இரண்டு தேசிய விமான நிறுவனங்களான குவைத் ஏர்வேஸ் மற்றும்ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு குவைத்துக்கு நேரடியாக நுழைய அனுமதிக்கும் திட்டத்தை நேற்று சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. இந்நிலையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என்பது கொரோனா அதிகம் பரவலான உள்ள நாடுகள் மற்றும் அதிக அளவில் இல்லாத நாடுகள் என்று வகைப்படுத்தவும், அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 3 முறை பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் கொரோனா பரவலாக இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை இரண்டு முறை நடத்தவும், இந்த இரண்டு பிரிவுகள் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(அதாவது சாதாரணமாக இவர்கள் குவைத்தில் நடமாட அனுமதிப்பதை குறிக்கிறது). மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஒரு வாரமாகக் குறைக்கவும் பரிந்துரையில் இரண்டு விமான நிறுவனங்கள் கோரியுள்ளது.