சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் குவைத் மற்றும் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்:
சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் துபாய் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் இருந்து வந்த சில பயணிகளிடம் சந்தேகம் அடிப்படையில் நடத்திய சோதனையில் சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வரப்பட்ட பெரிய அளவிலான தங்கத்தை கடந்த இரண்டு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதில் துபாயில் இருந்து AI IX 1644 விமானத்தில் நேற்றிரவு(செவ்வாய்க்கிழமை) சென்னை வந்த 4 பயணியிடம் இருந்து ரூபாய் 45.4 லட்சம் மதிப்புள்ள 864 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 17 தங்க பசை உருளைகளாக ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோல் திங்கட்கிழமை அன்று FZ 8517 மற்றும் AI IX 644 விமானங்களில் துபாயில் இருந்து வந்த இரண்டு பயணிகளிடம் இருந்து 44.4 லட்சம் மதிப்பிலான 842 கிராமம் தங்கத்தை 6 தங்கப்பசை உருளைகளாக ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல் KU1343 விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை குவைத்திலிருந்து மற்றும் AI IX 1644 விமானத்தில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 2 பயணியிடம் 635 கிராமம் தங்கத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை அவர்கள் 16 தங்க கட்டிகளாக வாஸ்லின் டப்பாவிலும், தங்க பசையாக 9 ஹேர்ஜெல் குப்பிகளிலும் மறைத்து கடத்தி எடுத்து வந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.
இதை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற தங்க கடத்தல் பறிமுதல்கள் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரபூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.