குவைத்துக்கான பயணத்தடை நீக்கம் தொடர்பான அமைச்சர் அறிவிப்புக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்:
அக்டோபர்-22,2020
இந்தியா உட்பட 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு குவைத்துக்கு நேரடியாக நுழைய அனுமதிக்க தேசிய விமான நிறுவனங்கள் சமர்ப்பித்த திட்டம் குறித்து சுகாதார அமைச்சர் பசில்-அல்-சபா இன்று வியாழக்கிழமை விவாதிப்பார். அமைச்சரின் ஒப்புதலுடன், வரும் நாட்களில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நுழைவு தடை இருக்கும் 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துவதன் மூலம் இந்த முடிவு எடுக்கப்படும்:
1) நோய் அதிகமாக உள்ள நாடுகள்.
2 ) நோய் குறைவாக உள்ள நாடுகள்.
முதல் பிரிவைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 3 முறை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.இதன் முறை பின்வருமாறு, முதலாவது புறப்படும் நாட்டிலிருந்து, இரண்டாவது குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மூன்றாவது தனிமைப்படுத்தப்பட்ட காலாவதியான பிறகு குவைத்திலிருந்து.
இரண்டாவது பிரிவில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இரண்டு முறை மட்டுமே பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும். புறப்படும் நாட்டிலிருந்து, குவைத் வந்ததும் பி.சி.ஆர் விமான நிலையத்தில். மேலும் சோதனை செலவை பயணிகளே ஏற்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் சமர்ப்பித்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அறிகுறிகள் 5 நாட்களுக்குள் வெளிப்படும் என்பதால் தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும்.
நிறுவன தனிமைப்படுத்தல் என்ற கருத்தை விமான நிறுவனங்கள் முன்வைத்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த 34 நாடுகளின் தடை தொடர்பான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியா உட்பட 34 நாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு குவைத்தில் நேரடியாக நுழைய வாய்ப்பு என்பதால் குவைத் எயர்வேஸ் விமான நிறுவன அதிகாரி அறிக்கை நேற்று வெளியானது முதல் குவைத் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் இறுதி முடிவு தொடர்பான அறிவிப்புக்கு வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.