குவைத்தில் கொரோனா வைரஸ் காரணமாக குடியிருப்பில் குடியிருக்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது:
அக்டோபர்-20,2020
குவைத்தில் குடியிருப்புகள்(அபார்ட்மென்ட்கள்) வாடகை கடுமையாக வீழ்ச்சியடைகிறது என்று உள்ளூர் செய்திதாள்கள் தெரிவிக்கின்றன. கோவிட் நெருக்கடியால் மக்கள் வாழ முடியாததால் பலர் பல்வேறு இடங்களுக்கு இடம்மாறிச் செல்வதும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் குவைத்திலிருந்து வெளியேறி வருவதன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிகமாக வசிக்கும் பிரபலமான பகுதிகளான சல்மியா, ஹவேலி பகுதிகளில் வாடகை 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படுக்கையறை அபார்ட்மெண்டிற்கான தற்போதைய வாடகை கடந்த ஆண்டு அக்டோபர் முறையே KD 230 மற்றும் KD 280 இருந்து 190 தினார்களுக்குக் குறைவாக உள்ளது. இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்டிற்கான வாடகை 240 தினார்களுக்கு குறைவானது.
இதுபோல் மஹ்புலா,கைத்தானில் வாடகைகளும் 25 சதவீதம் சரிந்தன. ஒரு படுக்கையறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை இப்போது 140 தினார்கள். இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்டிற்கான வாடகை 260 தினார்களிலிருந்து 190 தினார்களாக குறைந்துள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.