வெளிநாட்டவர்கள் இந்தியா வர நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத்திய அரசு அனுமதி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் பல மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று சற்றுமுன் இந்திய வெளியுறவுத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா விசாவை தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா வம்சாவழியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியாளர்கள் உட்பட மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானம், கப்பல் வழியாக இந்தியா வர இதன் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.