BREAKING NEWS
latest

Wednesday, October 28, 2020

குவைத்தில் தொழிலாளர் சட்டத்தை மீறிய பலரும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கைது:

குவைத்தில் தொழிலாளர் சட்டத்தை மீறிய பலரும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கைது:

அக்டோபர்-28,2020



குவைத் மனிதவள மேம்பாட்டு துறை((PAM),
உள்துறை அமைச்சகம்(Residency Affairs) மற்றும் நகராட்சி இணைந்து கடந்த சில நாட்களாக நடத்திவருகிற சோதனையில் சட்டத்தை மீறும் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்ற செய்தியை உள்ளூர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

குவைத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில்(Market's) தொழிலாளர் சட்டம் மற்றும் விசா சட்டத்தை மீறி வேலை செய்யும் தொழிலாளர்களை குறிவைத்து மூன்று துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக குவைத்தின் Khaitan, Jleeb Al Shuyoukh, Farwaniya, Wafra, Kabad மற்றும் Jahra பகுதிகளில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதுவரை நடந்த சோதனையில் சட்டத்தை மீறிய 100 பேர் வரையில்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று  பத்திரிகை தெளிவுபடுத்தியுள்ளது.

விசா 18 அல்லது விசா 20-யில் உள்ள  30 வெளிநாட்டினர் தினசரி அடிப்படையில் கைது செய்யப்படுவதை ஜிலீப் சோதனையில் காண முடிந்தது என்றும் ஸ்பான்சர்கள் இருக்கும் இடங்களைத் தவிர வேறு இடங்களில் வேலை செய்த குற்றம் மற்றும் குடியிருப்பு சட்டத்தை மீறிய குற்றங்களில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

கபாத் மற்றும் வஃப்ரா பகுதிகளில் 25 தொழிலாளர்கள் தற்காலிக சந்தையில் உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டனர் எனவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் தொழிலாளர் சட்டத்தை மீறிய பலரும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கைது:

« PREV
NEXT »