குவைத்திலிருந்து தாயகம் திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்கள் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தல்:
அக்டோபர்-29,2020
குவைத்திலிருந்து தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகம் திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்கள் இந்திய தூதரகத்தில் தங்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு அறிக்கையில் இன்று புதன்கிழமை(28/10/2020) தெரிவித்துள்ளது.
குவைத்தில் இருந்து தாயகம் செல்ல விரும்பும் இந்தியர்கள் தற்போதுள்ள கோரிக்கையை துல்லியமாகக் கணக்கிட புதியதாக பதிவு செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை ஏற்பாடு செய்ய தூதரகம் விரும்புகிறது. இருப்பினும், புதிய பதிவு செயல்முறை முந்தைய முறைக்கு மாற்றாக இல்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
புதிய பதிவுக்கான விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link for registration:
https://forms.gle/R12a8XDxYXfroXUaA
Note: முன்பு தாயகம் செல்ல பதிவு செய்து தாயகம் செல்லாமல் இருந்தாலும், புதியதாக தாயகம் செல்ல விரும்பினாலும் பதிவு செய்ய வேண்டும்