BREAKING NEWS
latest

Friday, October 30, 2020

குவைத்தில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் மழை துவங்கும் என்று கணிப்பு:

குவைத்தில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் மழை துவங்கும் என்று கணிப்பு:


அக்டோபர்-30,2020

குவைத்தில்  அடுத்த மாதம்(நவம்பர்) நடுப்பகுதியில் நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் முகமது கரம் கணித்துள்ளார். குவைத்தில் பிரபல தினசரி நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் நவம்பர் 8 முதல் குவைத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த வருடம் 130 முதல் 150 மி.மீ வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டின் வெப்பநிலை 18 முதல் 22 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இதில் வெப்பநிலை சில நேரங்களில் 4 டிகிரிக்கு கீழே குறையும், குறிப்பாக பாலைவன பகுதிகளில்.

Note புகைப்படம் பதிவுக்காக மட்டுமே...

Add your comments to குவைத்தில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் மழை துவங்கும் என்று கணிப்பு:

« PREV
NEXT »