குவைத்தில் கடந்த 100 நாட்களில் 192,000 பயணிகள் திரும்பியுள்ளனர்:
நவம்பர்-10,2020
குவைத்தில் சுமார் 192,000 பயணிகள்,கடந்த ஆகஸ்டு தொடக்கத்தில் பயணிகள் விமான சேவை நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து நவம்பர் 1 வரை (100 நாட்களில் ) நுழைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்று உள்ளூர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த வெளிநாட்டவர்களில் பெரும்பாலோர் குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படாத தடை பட்டியலில் உள்ள 34 நாடுகளின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் துபாய் விமான நிலையம் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் வழியாக வழியாக பயணம் செய்து குவைத்தில் நுழைந்தவர்கள் என்ற கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற அச்சத்தின் அடிப்படையில் 34 நாடுகளுக்கு எதிரான தடை கடந்த பல மாதங்களாக தொடர்கிறது, மேலும் இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, என்ற அறிக்கைகள் அதிகரித்து வருவதால், தங்கள் வேலைகளுக்காக குவைத் திரும்பவும், தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கவும் ஆர்வமுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையே விமானங்கள் மூலம் நாட்டில் நுழையும் பயணிகளின் கணிசமாக அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குவைத்தில் நுழைய தற்காலிக தனிமைப்படுத்தக்கூடிய இடமாக துபாயை தேர்வு செய்ய வேண்டிய இருக்கிறது. ஆனால் துபாயில் இருந்து குவைத்துக்கு கிடைக்கக்கூடிய விமானங்களின் பற்றாக்குறை காரணமாக, எத்தியோப்பியா நாட்டையும் குவைத்துக்குச் செல்வதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தக்கூடிய நாடாக தற்போது தேர்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தடைசெய்யப்பட்ட 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்தில் நுழைய அனுமதிக்க குவைத் அரசின் இரண்டு விமான நிறுவனங்கள் சமர்ப்பிக்க திட்டம் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில்உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.