BREAKING NEWS
latest

Thursday, November 19, 2020

குவைத் நாட்டில் வேலைக்கு வந்து பாதிக்கப்பட்ட109 பேரில் 36 தமிழர்கள் நேற்று மாலை தாயகம் திரும்பினர்:

குவைத் நாட்டில் வேலைக்கு வந்து பாதிக்கப்பட்ட109 பேரில் 36 தமிழர்கள் நேற்று மாலை தாயகம் திரும்பினர்:

                 (தாயகம் திரும்ப ஆவணங்கள் பெற்ற நேரம்)

Nov-19,2020

பலரின் வாழ்வையே புரட்டிப்போட்ட கொரோனா இங்கு குவைத்திலும் தனது கோர முகத்தைக்காட்டவே செய்தது. பலர் தங்கள் சொந்தங்களை இழந்தனர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்  வேலை பறிபோனது, இன்னும்  பலர் இந்த இக்கட்டான சூழ்நிலை வேலை செய்த கம்பெனிகளால் கைவிடப்பட்டு நிர்கதியாகி நின்றனர். அப்படி கொரோனா காலத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த 3 இலங்கை நாட்டவர்கள் உட்பட மொத்தம் 109 பேர் பாதிக்கபட்டிருப்பதாக கடந்த  செப்டம்பர் 20 அன்று நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது.

(பாதிக்கப்பட்ட உறவுகளுடன் ஆல்வின் விமான நிலையம் ) 

அதை "உதவும் கரங்கள்" வாட்ஸ்அப் குழுவில் விவாதித்தோம். உடனடியாக காரியத்தில் இறங்கினோம். கம்பெனியால் முற்று முழுதாய் கைவிட்டிருந்தது, அவர்களுக்கு அடிப்படை தேவை நிறைய இருந்தது. ஏற்கனவே வேலை இன்மை, சில மாதங்களாக சம்பள பிரச்சனை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு முதலில் உணவு உள்ளிட்ட அத்தியாவிசய தேவைகளை கவனித்தோம். அதற்கு உதவும் கரங்கள் தோழர்கள் உதாரத்துவமாய் கொடுத்து உதவினார்கள். இன்னும் தெரிந்த, தெரியாத தனி நபர்களும், குவைத் அமைப்புகளும் பெருமளவில் உதவியது. இல்லையெனில், இத்தனை நபர்களை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அவர்கள் தேவைகளை கவனித்து, இன்றைக்கு முதற்கட்டமாக 36  பேரை எப்படி தாயகம் அனுப்பி வைக்க முடிந்திருக்கும். நல்ல மனம் படைத்த மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

தூதரக வேலைகள், சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை நான் கவனித்துக்கொண்டேன். கேரள அமைப்பைச் சார்ந்த ஒருவர் அத்தனை பேருக்கும் PCR க்கு ஆனச் செலவை ஏற்றுக்கொண்டார்(ஒரு நபருக்கு 25 தினார் வீதம் ஆனது). மேலும் விமான பயணச்சீட்டை இந்திய தூதரகம் இலவசமாக வழங்கியது. சிலருக்கு விசா காலாவதியானது உட்பட சில பிரச்சனைகளுக்கு அபராதம் கட்ட வேண்டி இருந்தது. அதற்கும் தேவையானதில் ஒரு பகுதியை உதவும் கரங்கள் நண்பர்கள் பொறுப் பேற்றுக்கொண்டார்கள். இந்நிலையில் இன்டிகோ விமானம் மூலம் நேற்று(18/11/2020) மாலையில் குவைத்தில் இருந்து ஹைதராபாத் வழியாக  திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, வீடு வரை செல்லும் பயண செலவை தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் ஏற்று கொண்டது. 

        (திருச்சி விமான நிலையம் சென்றடைந்த புகைப்படம்)

இன்றைய தினம்(வியாழக்கிழமை) இவர்கள் ஊரில் தங்கள் குடும்பத்துடன் இருப்பார்கள். இதற்காக உழைத்தவர்களுக்கும் உடன் நின்ற அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி என்று குவைத் சமூக ஆர்வலர் ஆல்வின் ஜோஸ் அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Add your comments to குவைத் நாட்டில் வேலைக்கு வந்து பாதிக்கப்பட்ட109 பேரில் 36 தமிழர்கள் நேற்று மாலை தாயகம் திரும்பினர்:

« PREV
NEXT »