BREAKING NEWS
latest

Sunday, November 22, 2020

குவைத்தில் தடைவிதிக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்களை டிசம்பர் 10 முதல் அனுமதிக்க திட்டம்:

குவைத்தில் தடைவிதிக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்களை டிசம்பர் 10 முதல் அனுமதிக்க திட்டம்:




Nov:22,2020

குவைத்தில் நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள்
முதல்கட்டமாக டிசம்பர் 10 முதல் நேரடியாக நாட்டுக்குத் திரும்ப முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்ட இதற்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேவையான சுகாதாரத்துறை நெறிமுறைகள் கடைபிடித்து பிற ஏற்பாடுகளை முடிக்குமாறு சுகாதார அமைச்சகம் சிவில் விமான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி முதல்கட்டமாக இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பின்வரும் நாடுகளில் இந்தியாவில் இருந்து வரும் விட்டுத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வர விரும்பும் ஸ்பான்சர் இதற்காக அறிமுகம் செய்யும் புதிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் அழைத்துச் வர விரும்பும் தொழிலாளிக்கு Validity Visa இருக்க வேண்டும்.

குவைத்தில் நுழைய நடைமுறைகள்:

குவைத்திற்கு திரும்பி வரும் தொழிலாளர்கள் விமான நிலையத்தில் ஆரம்ப பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன்பிறகு இரண்டு வார நிறுவன தனிமைப்படுத்தலுககு உட்பட வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் முடிவில், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். இந்த பி.சி.ஆர் பரிசோதனைக்கான செலவுடன் தங்குமிடத்தின் வாடகை, உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளை ஸ்பான்சர் ஏற்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு எந்த நோய்தொற்று பிரச்சினையும் இல்லை என்றால்   தகவல் ஸ்பான்சருக்குத் தெரிவிக்கப்படும், அதன்பிறகு  தொழிலாளியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். மேலும் ஒரு தொழிலாளி விமான நிலையத்திற்கு வந்து பிறகு உள்ள நடவடிக்கை மற்றும் விமான நிலையத்தில் இருந்து  தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கை என்று வகைப்படுத்தி அதிகாரிகள் இரண்டு பிரிவுகளாக திட்டத்தை தயார் செய்துள்ளனர்.

இதற்கிடையில் தொழிலாளர்கள் திரும்புவதற்கான திட்டத்தால் டிக்கெட் விலை அதிகரிப்பு ஸ்பான்சருக்கு மேலும் சுமையாக இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு  டிக்கெட் விலையை அதிகரிக்க கூடாது என்று  என்று சிவில் விமான அதிகாரிகள் விமான நிறுவனங்களை எச்சரித்துள்ளது. இதற்கான தீர்வு என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் வருகைக்கான  டிக்கெட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரு வீட்டுத் தொழிலாளர்கள் குவைத்தில் நுழைய பயணச்சீட்டு, தனிமைப்படுத்தல் தங்கும் வாடகை, இரண்டு
 பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் 3 நேர உணவு உட்பட 350 தினார்கள் அதிகபட்சமாக நிர்ணயம் செய்யவும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஒரு பயணத்திற்கான அதிகபட்ச கட்டணம் 110 தினார்கள் இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comments to குவைத்தில் தடைவிதிக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்களை டிசம்பர் 10 முதல் அனுமதிக்க திட்டம்:

« PREV
NEXT »