அமீரகத்தில் கொலை செய்யபட்ட இந்திய தம்பதிகளின் குழந்தைகளுக்கு 10 வருட கோல்டன் விசா முதல் முறையாக வழங்கப்பட்டது:
Nov-24,2020
அமீரகத்தின் ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அங்கு வேலை செய்யும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட கல்வி தகுதிக்கு மேல் உள்ள நபர்களுக்கு 10 வருட கோல்டன் விசா வழங்கப்படும் என்று அறிவித்தார். முன்னர் தொழில் அதிபர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிரிவில் உள்ளவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் அடிப்படையில் அமீரகத்தில் கொலை செய்யபட்ட இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த விசா வழங்கப்பட்டது. மேலும் தாயகத்தில் உள்ள தங்கள் தாத்தா மற்றும் பாட்டி இரண்டு பேரையும் உடன் அழைத்து வந்து அமீரகத்தில் தங்கும் விதத்தில் அவர்களுக்கும் இந்த விசா வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் துபாய் காவல்துறைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி மற்றும் துபாயில் உள்ள குடியிருப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் பொது இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்நிலையில் 10 ஆண்டு கோல்டன் விசாக்களை இரண்டு பேருக்கும் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோருக்குமா வழங்கினர்.
பள்ளி கல்வி, உயர் படிப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்காலம் தேவைகளுக்கான நடவடிக்கைகளும் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைக்கழக ஏற்று, உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கி அவர்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறது.
முன்னர் கடந்த ஜூன் 17ஆம் தேதி துபாயில் உள்ள அரேபியன் ரேன்சஸ் பகுதியில் உள்ள தங்கள் வீட்டினுள் வைத்து 48 வயதுடைய ஹிரென் மற்றும் 40 வயதுடைய விதி அதியா ஆகியோர் 24 வயதான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவனால் படுகொலை செய்யப்பட்டனர் .
கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு ஷார்ஜாவில் பதுங்கியிருந்த கொலையாளியை துபாய் போலீசார் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த வீட்டிற்கு திருட சென்றதையும் , இந்திய தம்பதிகள் இருவரையும் கொலை செய்ததையும் அவன் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொலையாளிக்கு தண்டனை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .