நாட்டில் சிக்கித் தவிக்கும் 147,000 வெளிநாட்டினர் விசாகள் ரத்து; அடுத்த மாதம் முதல் அபராதத்துடன் பொது மன்னிப்பு:
Nov-19,2020
குவைத்தில் அடுத்த மாதம் முதல் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நடைமுறையில் வருகிற பகுதி பொது மன்னிப்பின் பலன்களைப் பெற தேவையான வசதிகளை ஏற்படுத்த, குவைத்தின் ஆறு Governorate-யில் உள்ள குடிவரவுத் துறை அலுவலகங்கள் அடுத்த வாரம் முதல் அதற்கான நடவடிக்கைகளை தொங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்தரவு நடைமுறையில் வருவது முதல்(டிசம்பர்-1 முதல்) குடிவரவுத்துறை அலுவலகங்கள் காலையிலும் மாலையிலும் திறந்து இருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
(Note: பகுதி பொதுமன்னிப்பு என்று இங்கு குறிப்பிடுவது அபராதம் செலுத்தி சட்ட விரோதமாக உள்ளவர்கள் விசா புதுப்பித்தல் செய்து தொடர்ந்து குவைத்தில் வேலை செய்வது அல்லது அபராதம் செலுத்தி நாட்டைவிட்டு வெளியேறுவதை குறிக்கிறது)
மேலும் குடிவரவு துறை ஸ்பான்சர்களிடமிருந்து தப்பியோடியதாக புகார்கள் நிலுவையில் உள்ள தொழிலாளர்களுக்கும் இந்த பொதுமன்னிப்பின் பலன்களை வழங்கும் திட்டங்களை உருவாக்கியுள்ளது. இதற்காக வீட்டுவசதித் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள துறை ஆகியவை ஒருங்கிணைந்து, இதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. நாட்டில் தற்போது ஏறக்குறைய 132,000 பேர் சட்டவிரோத தங்கிவருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் குறைத்து 40,000 பேராவது இந்த பகுதி மன்னிப்பு மூலம் தங்கள் விசாகளை புதுப்பித்தல் செய்வார்கள் என்று உள்துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.
வருகிற டிசம்பர்-1 முதல் பகுதி பொதுமன்னிப்பு நடைமுறையில் வருவதிலிருந்து சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்திய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது அபராதம் செலுத்துவதன் மூலம் அவர்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்கவோ வாய்ப்பளிக்கும். இதற்காக காலக்கெடு டிசம்பர் 31 வரையில் ஆகும். துணை பிரதமரும் மற்றும் உள்துறை அமைச்சருமான அனஸ் அல் சலேவின் சிறப்பு உத்தரவை அடிப்படையில் இந்த பகுதி பொதுமன்னிப்பு அமலுக்கு வருகிறது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக சுமார் 147,000 வெளிநாட்டவர்கள் விசாகள் ரத்தாகி உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக தங்கள் நாட்டில் சிக்கி குவைத் திரும்ப முடியாத நிலையில் அவர்கள் விசாகள் ரத்தாகி உள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் 26,500,00 வெளிநாட்டினர் செல்லுபடியாகும் வாசாவுடன் குவைத்தில் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்பு இது சுமார் 33 லட்சம் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.