BREAKING NEWS
latest

Tuesday, November 3, 2020

அபுதாபி பிக்-டிக்கெட் 15 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் வென்றவர் குவைத்தை சேர்ந்த இந்தியர் ஆவார்:

அபுதாபி பிக்-டிக்கெட் 15 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் வென்றவர் குவைத்தை சேர்ந்த இந்தியர் ஆவார்:



நவம்பர்-3,2020

குவைத்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் அபுதாபி பிக் டிக்கெட்  டிராவில் பங்கேற்று  15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்றுள்ளார் . 38 வயதான நோபின் மேத்யூ மனைவி மற்றும் 5 வயது மகனுடன் குவைத்தில் வசிக்கிறார் . ஸ்பேர் பார்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றும் இவர் , அபுதாபி ரேஃபிள் டிராவில் 254806 என்ற எண் கொண்ட டிக்கெட்டை கடந்த அக்டோபர் 17 அன்று வாங்கினார் .

இந்த டிக்கெட்டிற்கு தான் தற்போது 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு கிடைத்துள்ளது . பிக் டிக்கெட் தொகுப்பாளர் ரிச்சர்ட் , தொலைபேசியில் அழைத்து வெற்றி செய்தியை தெரிவித்த போது நம்ப முடியாத ஆச்சரியத்தில் மூழ்கி போனார் மேத்யூ . பிக் டிக்கெட் டிராவை பார்த்து கொண்டிருக்கிறீர்களா என்று ரிச்சர்ட் கேட்டுள்ளார் . அதற்கு மேத்யூ இல்லை என்று கூறியுள்ளார் . அதன் பிறகு அவரிடம் வெற்றி செய்தியை கூறியுள்ளார் ரிச்சர்ட் .


இந்நிலையில் 2007 - ம் ஆண்டு முதல் குவைத்தில் வாழ்ந்து வரும் மேத்யூ , தான் பெற்றுள்ள ஜாக்பாட் குறித்து உற்சாக மிகுதியில் பேசிய போது , மாதம் 7,100 திர்ஹம்ஸ் ஊதியம் பெறும் தனக்கு , இந்த ஜாக்பாட் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பெரியது . நான் பெற்ற வெற்றி பற்றி தகவல் தெரிவித்த போது இன்ப அதிர்ச்சியடைந்தேன் .

சந்தோஷத்தில் என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை . சரியான நோக்கங்களுக்காக இந்த பணத்தை பயன்படுத்துவேன் , என்றார் . இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான பிக் டிக்கெட் பிரமோஷன் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது . நவம்பர் 30 வரை 12 மில்லியன் திர்ஹம்ஸ் டிராவிற்கான டிக்கெட்டுகளை மக்கள் வாங்கலாம் . கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக , மூடிய கதவுகளுக்கு பின்னால் டிரா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

Add your comments to அபுதாபி பிக்-டிக்கெட் 15 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் வென்றவர் குவைத்தை சேர்ந்த இந்தியர் ஆவார்:

« PREV
NEXT »