குவைத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 2 இந்தியர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்:
குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த இரண்டு இந்தியர்கள் மரணமடைந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
அவர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் பின்வருமாறு:
முதல் நபர் பெயர் பயாஸ் ஷேக்(வயது-49) என்பதும் Adan மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். மேலும் பயாஸ் கர்நாடகா மாநிலத்தில் மங்களூரைச் சேர்ந்தவர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளது. பயாஸ் பத்ர் அல் முல்லா குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றோரு நபர் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாராமன் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்கிற மனோஜ்(வயது- 61) Al Razi மருத்துவமனையில் உயிரிழந்தார். மரண காரணம் மாரடைப்பால் ஏற்பட்டது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் அல்-கஸ்னா என்ற தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவருடைய மனைவி டாக்டர் சுசம்மா ஜார்ஜ் குவைத் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.