சவுதியில் 2021 மார்ச் முதல் தொழிலாளர்களுக்கு சாதகமாக சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்:
நவம்பர்-5,2020
சவுதி அரேபியா நாட்டின் தொழிலாளர் சட்டம் என்பது எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டது முதல் நடைமுறையில் உள்ள மிகவும் பழமையான வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் மீதான அதிகபட்சமாக அதிகாரம் உடையதாக இருந்து வருகிறது.
ஒரு தொழிலாளர் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அதன் இறுதி முடிவு என்பது முதலாளியுடையதாக(Sponsor) இருக்கும். இதை முற்றிலுமாக உடைந்து எறியும் விதத்தில்
சவுதி தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை(நவம்பர்-4) இன்று வெளியிட்டுள்ள சீர்திருத்தம் 2021 மார்ச் முதல் நடைமுறையில் வருகிறது. இந்த மாதம் இறுதியில் சவுதியில் ஜி-20 மாநாடு நடக்க இருக்கும் நிலையில். உலக நாடுகள் உற்று நோக்கம் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சவுதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம் மார்ச்-14, 2021 முதல் நீக்கம் எனவும் இவை மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி,
அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட காலம் டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும்( Online யில் ஒப்பந்தம் பதவியேற்றம் செய்யபடும்)
சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும்.
ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும்.
ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] மூலம் தாயகம் செல்லலாம்.
எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE Visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம்.
ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் மீறும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.
இவை அனைத்தும் "ABSHER & QIWA" Online மூலம் எளிதாக செயல்படுத்தவும் முடிவு.
இந்த புதிய திருத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் நன்மை மற்றும் குறைபாடுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் தெரியவரும்.
மேலும் கடந்த பல வருடங்களாக சவுதியில் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் வருகிறது என்று பல முறை செய்திகள் வெளியாகியுள்ள நிலையத்திலும் தற்போது தான் அது நிஜமாகி உள்ளது.