குவைத் விமான நிலையம் பின்வரும் தேதி முதல் மீண்டும் 24 மணி நேரமும் இயங்கும்:
நவம்பர்-10,2020
குவைத் சர்வதேச விமான நிலையம் கொரோனா பிரச்சினை காரணமாக தற்போது பகுதி நேரம் மட்டுமே இயங்குகி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 17,2020 முதல் மீண்டும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் என்று சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் சுலைமான் அல் பாவ்ஸான் விமான நிலையத்தின் சுகாதாரத் தேவைகளை மறுஆய்வு செய்வது குறித்து சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். விமான நிலையத்தின் பயணிகள் விமான சேவையை முழுமையாக மீட்டெடுப்பது தொடர்பாக கடிதம் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போதுமான பணியாளர்களை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது.
தொடர்ந்து இதற்கு தேவையான பணியாளர்களை வழங்க NASA Astronaut மற்றும் குவைத் ஏர்வேஸ் தயாராக உள்ளன. இந்த சூழலில், நவம்பர் 17 முதல் 24 மணி நேரமும் விமான நிலையத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் சூழலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிலையம் தற்போது இரவில் மூடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.