குவைத் பொதுமன்னிப்பு; நாள் ஒன்றுக்கு 2,400 நபர்கள் வருவார்கள் என்று உள்துறை எதிர்பார்க்கிறது:
Nov-30,2020
குவைத்தில் அபராதம்(மீறல்களை செய்ய நபர்கள்) செலுத்துவதன் மூலம் தங்கள் நிலையைத் திருத்தி மீண்டும் தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான ஆவணங்கள் சரிசெய்ய தேவையான நடைமுறைகளை முடிக்க உள்துறை அமைச்சகம் தயாராக உள்ளது.
நாளை டிசம்பர்-1 முதல் இறுதி வரை வழங்கப்பட்ட புதிய காலக்கெடுவின்படி, மீறல்களில் ஈடுபட்ட நபர்கள் அபராதம் செலுத்தி புதிய குடியிருப்பு பெற வேண்டும். நாள் ஒன்றுக்கு 2400 நபர்கள் தங்கள் ஆவணங்களை சரிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆறு governorate ஒவ்வொரு குடியிருப்பு அலுவலகத்திலும் 400 பேர் வீதம் நாள் ஒன்றுக்கு செல்ல முடியும்.
இதற்கான முன் அனுமதி பெற விரும்புவோருக்கு பார்கோடுகளை வழங்க சிறப்பு வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெரிசலைக் குறைப்பதற்கும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தினசரி நாளிதழ் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு மீறல்கள் சரிசெய்து எளிதாக்க சம்மந்தப்பட்ட அனைத்து துறையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் ஒரு துறை சம்மந்தப்பட்ட ஆவண நடவடிக்கைகள் முடித்த உடன், அடுத்த துறைக்கு எளிதாக மாற்றப்படுவார்கள்.
நாட்டில் 130,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 40,000 பேர் தங்கள் நிலையைத் திருத்த முற்படுவார்கள் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.