குவைத்தில் போக்குவரத்து துறை சோதனையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்:
நவம்பர்-5,2020
குவைத் உள்துறை அமைச்சகம் இன்று சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 942 வழக்குகள் பதிவு செய்யபட்டது எனவும், 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், 26 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
942 வழக்குகளில் 210 வழக்குகள் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்து தொடர்பான, 184 சீட் பெல்ட்கள் அறியாதது, 292 லாரிகள் ஓட்டுநர்கள் மீது , டாக்சி ஓட்டுநர்கள் மீது 58 மீறல்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மீது 70 மீறல்கள் ஆகியவை பதிவானது.
இதை தவிர உரிமம் இல்லாத காரணத்தால் 7 சிறுவர்கள் வழக்கு விசாரணைக்கு காவல்துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டனர், மேலும் 2 வாகனங்கள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள் உட்பட 9 வாகனங்கள் பார்க்கிங் விதியை மீறியது வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. அதே வேளையில் 26 பேர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இது நேற்று இரவு நேரத்தில் நடந்த சோதனையின் அறிக்கை என்று தெரிகிறது
கடந்த சில நாட்களாக குவைத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர் கவனமாக இருங்கள்.