BREAKING NEWS
latest

Thursday, November 5, 2020

குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 270 கிலோ போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகள் தடுத்தனர்:

குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 270 கிலோ போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகள் தடுத்தனர்:

நவம்பர்-5,2020


குவைத்தின் பிரபல துறைமுகம் வழியாக பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடைபெற உள்ளது என்று கிடைத்த இரகசிய  தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை குவைத் உள்துறை அமைச்சரும் துணை பிரதமருமான அனஸ் அல் சலே உத்தரவு அடிப்படையில் லெப்டினன்ட் ஜெனரல் இசம் சலீம் அல்-நஹாம் தலைமை Al-Shuwaikh துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள்  இரகசிய சோதனை நடைபெற்றது.

வீடியோ இணைப்பு:


இதில் உப்பு முட்டைகள் அடிக்கி வைத்திருந்த பெரிய குவியலின் மத்தியில் இந்த போதைப்பொருளை கடத்தல் கும்பல் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து இதை கண்டறிவதில் சவால் இருந்தது.

இதையடுத்து உப்பு முட்டைகள் பலவற்றை பிரித்து பார்த்து அதன் மத்தியில் மறைத்து வைத்திருந்த 270 கிலோகிராம் அளவிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யபட்ட போதைப்பொருளை உள்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

முதல்கட்டமாக இதில் தொடர்புடைய இரண்டு நபர்களை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அதிகாரிகள் கைது செய்தனர். குவைத்தில் வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு போதைப்பொருள் பறிமுதல் செய்வது இதுவே முதல் முறையாகும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல கோடிகள் ஆகும்.இதில் தொடர்புடைய கூடுதல் நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை துவங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Add your comments to குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 270 கிலோ போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகள் தடுத்தனர்:

« PREV
NEXT »