குவைத்தில் இருந்து கடந்த 28 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் நாடுகடத்தப்பட்டனர்:
Nov-17,2020
குவைத் உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளில் 8 லட்சம் வெளிநாட்டினர் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
1992 முதல் 2020 வரையிலான 28 வருடங்களின் புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர் சட்ட மீறல்கள் மற்றும் பல்வேறு குற்றங்கள் காரணமாக சுமார் எட்டு லட்சம் பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இப்படி நாடுகடத்தப்பட்ட ஒருவர் அவர்கள் வாழ்நாளில் மீண்டும் குவைத்தில் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருவர் நாடு கடத்தப்பட்ட பின்னர், அவர்கள் போலி பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி குவைத் திரும்புவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் நாட்டின் எல்லை வாயில்களில் புதுமையான மற்றும் அதிநவீன தொழிற்நுட்ப அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும் இந்த காலகட்டத்தில் போலியான பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற 25,000 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரபல தினசரி நாளிதழ் தெரிவித்துள்ளது.