குவைத்தில் இன்று 30 வருடங்களுக்கு பிறகு 7 வீரர்கள் உடல்கள் நல்லடக்கம் செய்யபட்டது:
1990 களில் குவைத்- ஈராக் போரின்போது கைதிகளாக கைது செய்யப்பட்ட 7 வீரர்கள் உடல்கள் இன்று சுலைபிகாட் கல்லறையில் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
துணை பிரதமர், உள்துறை அமைச்சர், அமைச்சரவை விவகார அமைச்சர் அனஸ் அல்-சலே, மற்றும் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான அகமது அல் மன்சூர் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
முன்னர் குவைத் உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் சான்று பொதுத்துறையால் நடத்தப்பட்ட டி.என்.ஏ மரபணு பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்ட இந்த ஏழு வீரர்களின் எச்சங்கள் ஈராக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட பின்னர் இறுதி மரியாதை நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த வீரர்களுக்கு கொரோனா காலத்திலும் அதை பொருட்படுத்தாதமல் ஆயிரக்கணக்கான குவைத் மக்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.