விசிட்டிங் விசாவில் உள்ள வெளிநாட்டவர் நவம்பர்-30 இன்றைக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:
Nov-30,2020
குவைத்தில் விசிட்டிங் விசாவில் வந்த வெளிநாட்டவர் நவம்பர்-30 இன்று திங்கட்கிழமைக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.
அதிகாரிகள் அறிக்கையில் விசிட்டிங் விசாவில் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டிற்கு(குவைத்திற்கு) வந்தனர், மற்றும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அவர்களின் விசாக்கள் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக திங்கள்கிழமை இறுதிக்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். தவறினால் டிசம்பர் 1, செவ்வாய்க்கிழமை தொடங்கி, அவர்கள் ஒரு நாளைக்கு 2 தினார்கள் வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த அறிக்கையில் பெரும்பாலான நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியிருந்த காரணத்தாலும் மற்றும் குவைத்தில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் அதிகாரிகள் இலவசமாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசிட்டிங் விசாவின் Validity-ஐ நீட்டித்தனர்.
கொரோனா வைரஸ் நோய்க்கு முன்னர் விசிட்டிங் விசாவில் நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்கள், குவைத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாகவே தங்கி வருகிறார்கள், அவர்கள் தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை. அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தவறினால், அபராதம் மற்றும் அவர்களின் Sponsor-க்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும் தற்போதும் குவைத்திலிருந்து சொந்த நாட்டிற்கு விமான சேவைகள் இல்லாத நாடுகளைச் சேர்ந்த விசிட்டிங் விசாவில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படலாம். உள்துறை அமைச்சகம் எதிர்வரும் மணிநேரத்தில் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று உள்ளூர் அரபு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இப்படி அறிவிப்பு வெளியானாலும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு பொருந்துமா என்பது தெரியவில்லை.
அதே சமயம், 2020 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் வேலைக்கு வந்து பல்வேறு காரணங்களால் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ள நபர்கள் அபராதம் செலுத்திய பின்னர் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அல்லது அபராதம் செலுத்துவதன் மூலம் அவர்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக ஆக்குவது டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் என்றும் அபராதத்துடன் ஆன இந்த பொதுமன்னிப்பு டிசம்பர் 31 வரையில் நடைமுறையில் இருக்கும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது