இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடையை டிசம்பர்-31 வரையில் நீட்டிப்பு செய்யபட்டுள்ளது:
Nov-26,2020
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக சர்வதேச விமானங்களுக்கான தடை டிசம்பர்-31 இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக வருகிற நவம்பர் 30 வரை தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அன்றைய செய்தி விரிவாக பார்க்க Link:https://ktpnews.blogspot.com/2020/10/30.html
ஆனால் இந்த தடை நடைமுறையில் இருந்தாலும் 'ஏர் பப்பில் ஒப்பந்தம்’ அடிப்படையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருவதற்காக பணிக்காக சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதியுடன் விமான சேவை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது அதன் சேவைகள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும்.