குவைத்தில் தடையுள்ள 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக நுழைய அனுமதிக்கும் திட்டம் தாமதமாகலாம்:
நவம்பர்-2,2020
குவைத்தில் 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான நேரடி நுழைவுத் தடையை நீக்குவது தாமதமாகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் அதிகாரிகள் சமர்ப்பித்த திட்டங்களை சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. மேலும் இந்த நடைமுறை திட்டத்திற்கு சுகாதார அமைச்சகம் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருந்தாலும் கொரோனா தொடர்பான உலக சுகாதாரத்துறையின் விதிமுறைகளை பின்பற்றி இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சுகாதார அமைச்சகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சவால்கள் பின்வருமாறு:
குவைத்தில் நுழைவு தடைசெய்யப்பட்ட 34 நாடுகளில் இருந்து நேரடியாக வரும் ஒவ்வொரு பயணிகளின் பி.சி.ஆர் சான்றிதழை சரிபார்த்து விவரங்களை சுகாதாரத்துறை ஆன்லைன் பதிவேட்டில் பதிவுசெய்து, ஒவ்வொரு நபரின் கொரோனா சோதனை மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக கணினி அமைப்பில் பதவியேற்றம் செய்வது, சோதனை முடிவு அறிக்கை வந்தவுடன் சம்பந்தபட்ட பயணிகளுக்கு தகவல்களை அனுப்பவும்,
மேலும் ஒவ்வொரு பயணிக்கும் Shlonik அப்ளிகேஷன் பதவியேற்றம் செய்வது செயல்முறையை முடித்து நோயாளியின் நடவடிக்கைகள் கண்காணிப்பு செய்தல், பயணிகளின் தனிமைப்படுத்தல் இடத்தின் விபரங்கள் பதவியேற்றம் செய்தல், நோய்தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு மூன்றாவது பி.சி.ஆர் சோதனை முடிவுகளைப் பெறுதல் மற்றும் அவற்றை கணியில் மீண்டும் பதவியேற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை முடிக்க வேண்டும் என்ற பல கட்டங்களை நடைமுறை படுத்த வேண்டியது உள்ளது.
இவற்றை முறையாக செயல்படுத்த தற்போதுள்ள சுகாதாரத்துறையின் கணினிகளின் மென்பொருளில் மேலும் பல மாற்றங்கள் செய்ய வேண்டியது உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை அனைத்தும் செயல்படுத்த கூடுதல் மனிதவள திறன் தேவைப்படும்(ஊழியர்கள்).மேலும் தோல்விகளுக்கு அதிக வாய்ப்புள்ள இந்த நடவடிக்கைகளுக்கு குவைத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம்.
விமான நிறுவனங்கள் பயணிகளை அனுமதிக்க சமர்ப்பித்த திட்டத்தில் உள்ள பட்டியலில் செயல்படுத்த பல கட்டங்களான நடைமுறைகள் உள்ளது. அதில் விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 20,000 பயணிகள் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்கும் முடியும் என்ற வசதி மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைக்கக் கூடிய ஒரே வசதி இதுதான். எந்தவொரு அவசர முடிவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை சுகாதார அமைச்சக அதிகாரிகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இவ்வளவு நடைமுறைகளை ஒவ்வொரு பயணிக்கும் சுகாதாரத்துறை முடிக்க வேண்டிய உள்ளதால் அரசாங்க வட்டாரங்களிடம் கிடைக்கும் தகவல்களின் படி 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான தற்போதைய நேரடி நுழைவுத் தடையை நீக்குவது குறித்த அறிவிப்பு வெளியாக குறைந்தது மேலும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.