குவைத் அமைச்சரவை 34 நாட்டினர் நேரடி நுழைவு பற்றி விவாதிக்கவில்லை; இன்றைய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்:
குவைத் அரசு வட்டாரத் தகவலை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற காணொளி காட்சி மூலமான அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவு தற்போது வெளியாகியுள்ளது:
1) வெளிநாட்டிலிருந்து திரும்பி குவைத் வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடரும் இதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் மற்றோரு அறிவிப்பு வரும் வரை தற்போதையை நிலை தொடரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2) இந்தியா, இலங்கை உள்ளிட்ட 34 நாட்டவர்கள் நேரடியாக குவைத்தில் நுழைவது பற்றி இன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு குவைத் நாட்டிற்குள் உள்ள ஹோட்டல்களில் ஒரு வார காலத்திற்கு நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) என்ற தீர்மானம் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
4) மேலும் தடைவிதிக்கப்பட்ட 34 நாடுகள் பட்டியலில் இருந்து எந்தவொரு நாட்டை நீக்கவோ, புதிய எந்தவொரு நாட்டையும் தடைப்பட்டியலில் சேர்க்கவும் இல்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளது.
5) இன்றைய கூட்டத்தில் குவைத்தின் தற்போதைய சுகாதார நிலைமை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து முக்கியமாக மதிப்பாய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் இது குறித்து அமைச்சரவையில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
6) குவைத்தில் அடுத்த மாதம் தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணங்களால் வேட்பாளர்களின் எந்தவொரு கூட்டங்களையும் அல்லது சிறப்பு சந்திப்புகள் நடத்த கூடாது
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்யவும், அதை கண்காணிக்கவும், மீறும் நபர்களுக்கு எதிராக அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Reporting by kuwait tamil pasanga Team.