குவைத்தில் 34 நாட்டவர்கள் நுழைய தடை; அனுமதி தொடர்பாக தொடர்ந்து பரிசீலனை:
நவம்பர்-6,2020
குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று(05/11/20) வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக நுழைவது குறித்து எந்தவொரு இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அந்த செய்தியில் விமான நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறை படுத்துவதன் சாத்தியக்கூறு( தொழிநுட்பம் பக்கமும், நடைமுறை படுத்துதல் பக்கமும்) தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.மேலும் அந்த செய்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் இரண்டு குவைத் அரசு விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பில் இரண்டு சந்திப்புகள் நடைபெற்றது எனவும், அதன் பிறகு இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என்ற தகவலையும் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் நுழைந்தவுடன் தானியங்கி முறையில் நடைமுறைகள் எளிதாக முடிக்கவும், சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலைப் பளுவை குறைப்பது தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் நேரடியாக நுழைய அனுமதிப்பது தொடர்பான இறுதி முடிவு வெளியாவதில் தொடர்ந்து காலம் தாமதம் ஏற்படும் என்றே தெரிகிறது.