குவைத்தில் பொதுமக்கள் இதை செய்தால் 50 முதல் 500 தினார்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும்:
Nov-24,2020
குவைத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு தண்டனை கடுமையாக்கப்படுகிறது. இது தொடர்பாக குவைத் சுற்றுச்சூழல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தபட்சம் 50 தினார்கள் முதல் அதிகபட்சம் 500 தினார்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கு இணங்க கடற்கரை பிரதேசங்கள், பாலைவன பகுதிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பொழுதுபோக்கு வரும் மக்கள் சரியான இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டும் என்று இந்த குழு பொதுமக்களை வலியுறுத்தியது.
இதற்காக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் மற்றும் கூடுதலாக, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பல சுவரொட்டிகள் மக்கள் பார்வையில் படும்படி இப்படிபட்ட இடங்களில் வைக்கப்படும் என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் கூறுகையில் பொதுமக்கள் கழிவுகளை அதற்கான குப்பைத் தொட்டிகள் நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் நாம் மாறினால் மட்டுமே மாற்றங்கள் உருவாகும்.