சவுதியில் மரங்களை வெட்டினால் ரூ.59.75 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை:
(Asia மாவட்டம், Faifa, Saudi Arabia)
Nov 15, 2020
சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 3 கோடி ரியால் அபராதம்( இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 59 கோடியே 75 லட்சம் ரூபாய்) மற்றும் 10 வருடங்கள் சிறை தண்டனையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், அவை சார்ந்த மண் வளத்தை அபகரிப்பதற்கும் இந்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
மரங்களை வெட்டுவது, மருத்துவ வகை தாவரங்கள் மற்றும் பிற தாவரங்களை வேருடன் பிடுங்குவது, இலைகளை உரிப்பது மற்றும் மரத்தின் கீழ் பகுதிகளில் இருந்து மண்ணை அகற்றுவது அனைத்தும் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
பாலைவன நாடான சவுதியில், சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக விஷன் 2030-யின் ஒரு பகுதியாக, நாட்டை பசுமையாக்கும் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு நாடு முழுவதும் 1 கோடி மரங்களை நடும் திட்டத்தின் முதல் கட்டம் ஏப்ரல் 2021-க்குள் நிறைவடையும்.