அமீரகத்திலிருந்து 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மே முதல் இந்தியா திரும்பியுள்ளனர்:
நவம்பர்-3,2020
அமீரகத்தில் இருந்து கொரோனா பிரச்சினை துவங்கிய பிறகு மே-7 முதல் தற்போது வரையில் 63,1000 பேர் வரையில் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் ஜூலை-12 முதல் இந்தியாவில் இருந்து 22,0000 பேர் அமீரகம் திரும்பினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்திய தூதுவர் பவன் கபூர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் கடந்த ஏப்ரல்-29 முதல் 63,5000 பேர் வரையில் வந்தே பாரத் திட்டத்தில் தாயகம் திரும்புவதற்கு இந்திய தூதரகத்தில் முன்பதிவு செய்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமீரகத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியதை அடுத்து பலரும் தாயகம் திரும்பும் திட்டத்தை கைவிட்டனர். இதுபோல் அக்டோபர் முதல் இந்தியா அமீரக விமான சேவைகள் விகிதம் அதிகரித்துள்ளது என்று இந்திய தூதரக அதிகாரி நீரஜ்-அகர்வால் கூறியுள்ளார். இதற்கிடையே அமீரகத்தில் இருந்து வேலை இழப்புகள் காரணமாக 8,0000 பேர் வரையில் தாயகம் திரும்பினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தொழிலாளர்கள் இழப்பு அமீரகத்தின் முன்னோக்கிய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிகிறது.
இதற்கிடையே தினசரி 8,000 முதல் 10,000 பேர் வரையில் தாயகம் திரும்புகிறார்கள் என்றாலும் அதே விகிதத்தில் இந்தியர்கள் அமீரகம் திரும்புகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான air bubble ஒப்பந்தம் வரும் டிசம்பர் 31-வரையில் நீட்டிப்பு செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் வேலை வாய்ப்புகள் தேடி விசிட்டிங் விசாவில் அமீரகத்தில் வரும் நபர்களோ அல்லது ஏஜென்சிகள் மூலம் அமீரகத்தில் வேலைக்கு வரும் நபர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெளிவாக விளக்கியுள்ளனர்.போலியான விசாகள் ஆயிரக்கணக்கில் அமீரகத்தில் இருந்து கொடுக்கிறார்கள் மிகவும். எச்சரிக்கையுடன் இருங்கள்.
இதுபோல் நவம்பர்-3 இந்த நிமிடம்(12:00 pm) வரையில் குவைத்திற்கு எந்தவொரு வகையான விசாவும் அரசு வழங்கவில்லை பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.