குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் குடும்ப விசாவில் தொடரலாம்:
Nov-19,2020
குவைத்தில் 2021 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கு விசா காலாவதி ஆனால் புதுப்பித்தல் செய்து வழங்கப்படாது என்று கடந்த வாரம் அறிவித்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடும்ப விசாவுக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மனிதவள பொது அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் அகமது அல் மூசா என்றார், மேலும் புதிய முடிவைச் செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
அந்த நேரத்தில் செய்தி Link: https://ktpnews.blogspot.com/2020/11/1-60.html
இந்த புதிய முடிவு 2021 ஜனவரி 1 க்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்றார். ஆனால் இவர்கள் விசா பெற்று குடும்பத்துடன் தங்கியிருந்தாலும் வேலை செய்ய முடியாது.
நிபந்தனை பின்வருமாறு:
1) 60 வயதுக்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி கல்வி மட்டுமே உள்ளவர்கள் தாயகம் திரும்ப வேண்டும்.
2) இரண்டாம் நிலை டிப்ளோமா அல்லது உயர் கல்வி பெற்றவர்கள் குவைத்தில் தங்கலாம் என்று அவர் கூறினார்.
மேல்குற்றிபிட்ட நிபந்தனை அடிப்படையில் தற்போது வேலை செய்து வரும் விசா Validity உள்ளவர்கள் 2021 தொடங்கினாலும் குவைத்தில் தொடர்ந்து தங்கலாம், அவர்களின் தற்போதுள்ள விசா Validity முடியும் வரைக தாயகம் திரும்ப வேண்டியது இல்லை, அந்த விசா Validity முடியும் போது உயர்நிலைப் பள்ளி கல்வி தகுதி உள்ளவர்கள் மட்டும் தாயகம் திரும்ப வேண்டும். அதற்கு மேல் கல்வி தகுதி உள்ளவர்கள் தொடர்ந்து குவைத்தில் தங்கலாம்.