அமீரக பெண் ஒருவர் 7 கண்டங்களுக்கும் பயணம் செய்து கின்னஸ் சாதனை:
Nov-19,2020
அமீரகத்தைச் சேர்ந்த அல் ரோமைதி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்த பயணத்தின்போது மொத்தமாக 208 நாடுகளையும் ,அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
ஏழு கண்டங்களுக்கும் 3 நாட்கள் 14 மணிநேரம் 46 நிமிடம் 48 வினாடிகளில் வேகமாகப் பயணித்த கின்னஸ் சாதனையை செய்துள்ளார் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரோமைதி . ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிப்ரவரி 13 , 2020 அன்று அவரது சாதனை படைத்த பயணம் முடிவடைந்தது .
இந்த சிறப்புவாய்ந்த பயணத்தின்போது , அல் ரோமைதி 208 நாடுகளையும் , அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டார் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்டுள்ளது , நான் அவர்களின் நாடுகளுக்குச் சென்று அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி அறிய விரும்பினேன் என்று அல்ரோமைதி கூறினார்.
மேலும் இது ஒரு கடினமான பயணம் , குறிப்பாக விமான நிலையங்களில் நிறைய பொறுமையுடன் இருக்கவேண்டும். பலத்தரப்பட்ட விமான பயணங்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது . கின்னஸ் உலக சாதனை பட்டத்தை அடைவது எனக்கும் எனது சமூகத்திற்கும் கிடைத்த முழுமையான மரியாதை என தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஆய்வுக்கு பிறகு இவருடைய பயணம் உலக சாதனையாக "உலக சாதனை அமைப்பு" நேற்று(நவம்பர்-18) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதை அந்த பெண்மணி மகிழ்ச்சியுடன் பகிர்வு செய்துள்ளார்.