குவைத்தில் கள்ளசாராயம் மற்றும் 75 கிலோ போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது காவல்துறை தகவல்:
நவம்பர்-12,2020
குவைத்தின் Farwaniya பகுதியில் நடத்திய வாகனச் சோதனையில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆல்கஹால் தயாரிப்பு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. 45-பீப்பாய்களில் கள்ளச்சாராய கலவையும் மற்றும் 175 பாட்டில்கள் மது விற்பனைக்கு தயாராக இருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 ஆசிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மற்றோரு சம்பவத்தில் கடலோர காவல் படை இரவு ரோந்து நேரத்தில் பழுதடைந்து மூழ்கும் நிலையில் இருந்த படகை மீட்டனர். இந்த படகில் இருந்த 3 ஆசியா நாட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து குப்பார் தீவுக்கு அருகே போதைப்பொருள் புதைத்து வைத்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ ஹெராயின் உட்பட 75 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.