குவைத்திற்கு 80,000 வீட்டுத் தொழிலாளர்கள் 5 மாதங்களுக்குள் திரும்புவர்:
குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் திரும்புவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நாட்டிற்கு திரும்புவதற்கான சட்ட அம்சங்களையும் விரிவான நடைமுறைகளையும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர், தாரிக் அல்-முஸ்ரிம் வியாழக்கிழமை( இன்று) அறிவித்தார். 80000 தொழிலாளர்கள் 4 லிருந்து 5 மாதங்களுக்குள் குவைத் திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் திரும்புவதற்கான திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் தினசரி இரண்டு பயணங்களில்(தினசரி இரண்டு விமான சேவைகள் மூலம் ) 600 தொழிலாளர்கள் குவைத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பும், அவர்கள் வந்தபின்னும் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் தங்கவைக்கப்படுவார்கள்
குவைத்தில் சுகாதார நடவடிக்கைகள் குறித்து இத்திட்டத்தில்:
ஒரு தொழிலாளி நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவரின் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும், பின்னர் அவர் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களால் பரிசோதிக்கப்படுவார்கள், மேலும் தொழிலாளி இரண்டு வார தனிமை படுத்தலுக்கு பிறகு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
வீட்டுத் தொழிலாளர்கள் தங்குவதற்காக சில ஹோட்டல்களையும் குடி இருப்புகளையும் ஒதுக்குவதைப் பற்றி அதிகாரிகள் ஹோட்டல் சங்கத்துடன் விவாதிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் இறுதியாக்க படவில்லை ,மேலும் அவை சம்பந்தப்பட்ட குழுக்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் தொழிலாளர்களை குவைத்தில் நேரடியாக நுழைய அனுமதிக்கும் இறுதி உத்தரவு பெரும்பாலும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் வெளியாகும் என்று சம்மந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Editor: Ktpnews Official