குவைத்தில் உள்ள இந்தியர்கள் இவர்களிடம் இலவச சட்ட ஆலோசனை பெறலாம்:
நவம்பர்-1,2020
குவைத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் பின்வரும் இந்திய வழக்கறிஞர்கள் சிலர் இந்தியர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து சட்ட ஆலோசனையைப் பெற விரும்பும் இந்தியர்கள், இந்திய தூதரகத்தில் உள்ள சமூக நலப் பிரிவுடன் நீங்கள் தொடர்பில் இருந்த தங்களது முந்தைய கடிதப் பிரதியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
அவர்களின் சேவை இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கும் தன்மையில் மட்டுமே இருக்கும் என்று தூதரகம் தெளிவுபடுத்தி உள்ளது. தனி நபர்கள் இதைத் தாண்டிய சேவைகளை தங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம்.
எவ்வாறாயினும், இவர்களிடம் ஆலோசனை பெற்று உங்கள் தொழிலாளர் உரிமைகள்( பிரச்சினை) தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து எதாவது எதிர்விளைவு சந்திக்க நேர்ந்தால் இந்திய தூதரகம் பொறுப்பல்ல என்றும் இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.