பஹ்ரைன் நாட்டின் பிரதமர் இன்று மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது:
நவம்பர்-11,2020
பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா இன்று புதன்கிழமை காலையில் அமெரிக்காவில் உள்ள மாயோ கிளினிக் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் நியூஸ் ஏஜென்சி(BNA) வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஒரு வாரத்திற்கு நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் நாளை வியாழக்கிழமை துவங்கி அரசாங்கத் துறையின் பணிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து நாட்டில் மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் என்று தெரிகிறது.
அவரது உடல் தாயகம் வந்தபின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும், கடவுள் அவருக்கு இரக்கம் காட்டட்டும் எனவும், இறுதி சடங்கு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறவினர்களுக்கு மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
Reporting by Ktpnews Official