குவைத்தில் பள்ளிகளில் எழுத்து தேர்வுகள் நடத்த அனுமதி இல்லை; தேர்வுகள் ஆன்லைனில் நடந்த சுகாதாரத்துறை உத்தரவு:
நவம்பர்-12,2020
குவைத்தில் குடிமக்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள பல்வேறு பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பல மாதங்களாக வீடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.
இந்நிலையில் இந்த மாத இறுதியில் தொடங்கி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளிக்கு மாணவர்கள் நேரடியாக தங்கள் பள்ளிகளுக்கு வந்த தேர்வுத்தாள் மூலம் எழுத்துத்தேர்வு மேற்கோள்ள அனுமதிக்க வேண்டும் என்ற குவைத் கல்வி துறை அமைச்சகத்தின் கோரிக்கையை சுகாதார அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர்.முஸ்தபா-அல்-ராடா கல்வி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கோவிட் சூழலில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது.
இதையடுத்து எழுத்துத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துமாறு குவைத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் குவைத் சாதாரண நிலைக்கு திரும்பும் வரையில் மற்றும் கொரோனா நோய்தொற்றை தடுக்கும் தடுப்பூசி கண்டறியும் வரையில் இந்த முறை கடைபிடிக்க அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Editing: Ktpnews