குவைத்தில் வெளிநாட்டினர் தற்கொலை அதிகரிப்பு அதிகாரிகள் தகவல்; நேற்று மீண்டும் ஒருவர் தற்கொலை:
நவம்பர்-12,2020
குவைத்தின் Jaber Al-Ahmad பகுதியில் ஆசியர் நாட்டவர் ஒருவர் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கு பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் கட்டுமான வேலை நடைபெற்று வருகிற வீட்டில் இருந்து தூக்கில் தொடங்கி நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது.
இவர் குவைத் குடும்பத்தின் ஓட்டுநராக பணிபுரிந்தார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் கிடைத்தது வந்த போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய காலங்களில் குவைத்தில் தற்கொலை வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் ஊரடங்கு இரண்டு ஒரே நேரத்தில் விதிக்கப்பட்ட காரணங்களால் பலர் வேலை இழந்தனர். குவைத் போலிசார் பதிவுகளின்படி, பெரும்பாலான தற்கொலை வழக்குகள் ஆசிய வெளிநாட்டினரை உள்ளடக்கியது என்று தெரிகிறது.