வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு மனிதவள ஆணையம் பணி அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது:
Nov-17,2020
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை குவைத்துக்கு வேலைக்கு திரும்பி அழைக்க நிபந்தனையுடன் அனுமதி அதாவது Work Permit வழங்கி துவங்கியுள்ளது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை(Public Authority of Manpower) ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்காக தேவைப்படும் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களின் பட்டியலை முதலில் உள்துறை அமைச்சகத்திற்கு முதலாளிகள்( வேலைக்கு அழைத்து வரும் அரபி) அனுப்புவதற்கு குவைத் அமைச்சரவையால், நியமனம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னர் அனுமதி அளித்திருந்தது.
மேலும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதி பெற்ற பின்னர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி வழங்க முதலாளிகள் மனிதவள துறைக்கு விண்ணப்பிப்பார்கள். இப்படி விண்ணப்பம் செய்யபட்ட பின்னர் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அதற்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
இறுதியில் மனிதவள துறையால் விண்ணப்பம் செய்யபட்ட ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டவுடன், முதலாளிகள் அவற்றை சிக்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அனுப்புவார்கள். இந்த நடைமுறைக்கு பின்னர் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து குவைத் திரும்புவதற்கு தேவையான நடைமுறைகளை நிறைவு செய்வார்கள்.
இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சாலிஹ் ஆஷோர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கு வேலை அனுமதி வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் மக்கள் ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்காக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரானது அரசாங்கத்தின் இந்ந முடிவு என்று அவர் குற்றம் சாட்டினார்.