குவைத்தின் தினசரி வானிலை மைய அறிவிப்பு விபரங்கள்:
குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், மிதமான வானிலை நிலவும், வடமேற்கு திசையில் இருந்து சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக காற்று மணிக்கு 08 முதல் 28 கிமீ / வரை இருக்கும் என்றும், பகல் நேரங்களில் சில உயர் மேகங்கள் தோன்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
இரவைப் பொறுத்தவரை, குளிர் காலநிலை மற்றும் ஓரளவு மேகமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு காற்றின் வேகம் மணிக்கு 08 முதல் 30 கிமீ வரையில் இருக்கும்.
வெப்பநிலை:
நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப 25 டிகிரி முதல் 13 டிகிரி வரை மாறுபட்ட வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.