குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி வானிலை அறிவிப்பு:
குவைத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வானிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும், காற்று தென்கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையில் மணிக்கு 12-45 கிமீ வரையில் மிதமான வேகத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சில நேரத்தில் மழைத்தூறல் ஏற்படும்.
இரவைப் பொறுத்தவரை, வானிலை குளிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மேகக மூட்டம் படிப்படியாகக் குறையும் மற்றும் காற்று வடமேற்கு திசையில் இருந்து 20 - 45 கிமீ வேகத்தில் இருக்கும், சிறிய அளவிலான மழைக்கு வாய்ப்புடன் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று பகலில் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமான வெப்பநிலை 27 டிகிரி என்றும், இது இரவில் 19 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.