BREAKING NEWS
latest

Wednesday, November 11, 2020

துபாயில் ஐபிஎல் இறுதிப்போட்டி டெல்லியை தோற்கடித்தது கோப்பையை வென்றது மும்பை அணி:

துபாயில் ஐபிஎல் இறுதிப்போட்டி டெல்லியை தோற்கடித்தது கோப்பையை வென்றது மும்பை அணி:

                      (Photo: IPL OFFICIAL PAGE)

நவம்பர்-11,2020

துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் 2இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரோயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்தது . தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்காக ரோகித்தும் , டி காக்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர் . ஆரம்பம் முதல் டெல்லி பந்து வீச்சை அதிரடியாக அடித்து விளையாடினர் இருவரும் .

21 பந்துகளில் 41 ரன்களை குவித்தனர் . அதில் 5 பவுண்டரிகளும் , 3 சிக்ஸர்களும் அடங்கும் . டி காக் 20 ரன்களில் அவுட்டானார் . ரோகித் தொடர்ந்து விளையாடி வருகிறார் . அவர்களது ஆட்டம் ' மும்பைக்கு தான் கோப்பை என அடித்து சொல்வதை போல இருந்தது . தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் , கேப்டன் ரோகித்துடன் அதிரடியாக விளையாடினார் .

                   (Photo: IPL OFFICIAL PAGE )

அஷ்வின் வீசிய 11 வது ஓவரில் சிங்கிள் எடுக்க முயன்றார் ரோகித் . இருப்பினும் அதற்கு ' நோ ' சொல்லியிருந்தார் சூர்யகுமார் யாதவ் . அதற்குள் ரோகித் கிரீஸை கடந்துவிட்டார் . இரு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நிற்க ரோகித்துக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சூர்யகுமார் யாதவ் . அதையடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் ஆட்டத்தை விரைவில் முடிக்கும் நோக்கத்துடன் 33 ரன்களை சேர்த்தார் . மறுபக்கம் ரோகித் 68 ரன்களில் அவுட்டானார் . பொல்லார்டும் இரண்டு பவுண்டரிகளை அடித்த கையேடு பெவிலியன் திரும்பினார் .

ரபாடா , அஷ்வின் , அக்சர் பட்டேல் மாதிரியான பவுலர்கள் விக்கெட் வீழ்த்தாமல் போனதும் டெல்லியின் வீழ்ச்சிக்கு காரணமானது . 18.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை . இந்த வெற்றியின் மூலம் மும்பை ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது .

Add your comments to துபாயில் ஐபிஎல் இறுதிப்போட்டி டெல்லியை தோற்கடித்தது கோப்பையை வென்றது மும்பை அணி:

« PREV
NEXT »