குவைத்திற்கு தடை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு ஒரு வாரம் ஹோட்டல் தனிமைப்படுத்தல்:
நவம்பர்-12,2020
குவைத்திற்கு தடைப் பட்டியலில் உள்ள இந்தியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சுகாதார அமைச்சகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனை அடிப்படையில் அவர்கள் 7 நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் செல் போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும், இப்படி வரும் நபர்களை தனிப்பட்ட முறையில் அழைத்துச் செல்ல வெளி நபர்களை அனுமதிக்க கூடாது எனவும், விமான நிலைய பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் 7 நாட்கள் கழித்து நடக்கும் இறுதி நோய்தொற்று மருத்துவ சோதனைகளுக்கான செலவுகள் அனைத்திற்கும அவர்களே பொறுப்பு எனறும் அல்-ராய் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த செவ்வாய்க்கிழமை நவம்பர்-17,2020 தொடங்கி 24 மணி நேரம் விமான நிலைய நடவடிக்கைகளைத் தொடங்கத்( 24 மணிநேரமும் இயங்கும்) தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சகத்தின்(MoH) பதிலுக்காக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) காத்திருக்கிறது என்று அல்-ராய் தினசரி செய்தி மேலும் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், குவைத் அரசின் 34 நாடுகளின் தடை பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இடையே விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்குவதன் மூலம், அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் வருகை தொடர்பான சோதனைகள் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து சுகாதார விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் விதித்துள்ளனர்.
மேலும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்
வீட்டுத் தனிமைப்படுத்தல் என்ற நடைைமுறையில் சுகாதார அதிகாரிகள் திருப்தியடையவில்லை என்றும், 34 தடைப்பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்கள் ஹோட்டல்களில் அல்லது தனிப்பட்ட தங்குமிடங்களில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளனர். பி.சி.ஆர் சோதனை ஏழாம் நாளில் மேற்கொள்ளப்படுகிறது, அதன் முடிவின் அடிப்படையில் எதிர்மறையாக( Corona Negative) அமைந்தால் அவர்கள் குவைத்தில் உள்ள தங்கள் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க 34 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இன்னும்(தற்போது வரையில்) நடைமுறையில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா, இலங்கை, நேபாளம், ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், போஸ்னியா, ஹெர்சகோவினா, ஈராக், மெக்ஸிகோ, இந்தோனேசியா, சிலி, பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு, கொசோவோ, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை அடங்கும்.
தடைசெய்யப்பட்ட 34 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடை பட்டியலில் இல்லாத வேறு எந்த நாட்டிலும் 14 நாட்கள் தங்கலாம், பின்னர் குவைத்துக்கு வருவதற்கு முன்பு அவர்கள் கொரோனா வைரஸ் எதிர்மறை என்பதைக் காட்டும் பி.சி.ஆர் சான்றிதழைப் பெறலாம் பின்பு குவைத் வரலாம். தற்போது வரையில் இந்த மறைமுகமான வசதி பயன்படுத்தி இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குவைத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Editing: Ktpnews Official