குவைத்தில் சர்ச்சை கருத்துகளால் பிரபலமாக நாடாளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஷிம் புதிய டிவிட்டர் பதிவு வெளியிட்டார்:
Nov-16,2020
குவைத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் மிகவும் பிரபலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சஃபா அல் ஹாஷிம் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள செய்தி இப்படி......
கொரோனா தடுப்பூசி போடுவதை நான் நிராகரிக்க உள்ளேன் என்று தன்னுடைய எதிர்ப்பை அவர் ட்விட்டர் கணக்கு மூலம் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி பெறலாமா வேண்டாமா என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பம் எனவும். கொரோனா தடுப்பூசிக்கு போடாத குடிமக்களுக்கு எதிராக அரசாங்கம் பயணத் தடை விதிக்கும் என்று தனக்கு தகவல் கிடைத்தது என்று சஃபா ட்விட்டரில் மேலும் பதிவு செய்தார்.
மேலும் இதற்கு பதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடிமக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறு அவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம்அனுப்பியுள்ளார் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த விஷயத்திற்கு தான் அரசாங்கத்தின் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.
குவைத்தில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் அசாதாரண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இது அரசாங்க சேவைகளை மோசமாக பாதிக்கிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸால் ஏற்பட்ட தற்போதைய நிதி நெருக்கடி குறைந்த வருமானம் கொண்ட ஒரு பிரிவு குடிமக்களை உருவாக்க வழிவகுத்தது என்றார்.
நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடிமக்களுக்கு மட்டுமே அரசாங்க மானியங்களை மட்டுப்படுத்தவும் அவர்கள் பிரதமரை வலியுறுத்தினர்.