குவைத் வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை:
Nov-25,2020
வானிலை ஆய்வு மையம் இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை நேரத்தில் மிதமான வானிலை நிலவும் என்றும், மேலும் மிதமான காற்று தென்கிழக்கு நோக்கி மணிக்கு 08 முதல் 32 கிமீ வேகத்தில் வீசும் மற்றும் சில சிறிய மேக மூட்டங்கள் தோன்றும் என்று தெரிவித்துள்ளது.
இரவைப் பொறுத்தவரை குளிரான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு காற்று மணிக்கு 10 முதல் 40 கிமீ மிதமானதாக வேகத்தில் இருக்கும், மேலும் சில உயர் மேக மூட்டங்கள் தோன்றும்.
இன்றைய வெப்பநிலை:
நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப வெப்பநிலை 23 டிகிரி முதல் 8 டிகிரி வரை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.