குவைத் இந்திய தூதரகம் சார்பில் அனைவருக்கும் தீபாவளி இனிப்பு வழங்கப்பட்டது:
நவம்பர்-12,2020
குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் வருகிற நவம்பர்-14 தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக குவைத் இந்திய தூதரகத்தில் பல்வேறு தேவைகளுக்கா வருகை தருகின்ற அனைவரும் இனிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
குவைத்தின் புதிய தூதுவராக சிபி ஜார்ஜ் அவர்கள் கடந்த ஆகஸ்ட் இறுதியில் பொறுப்பற்ற பின்னர் குவைத்தில் சேவையாற்றி மற்ற தூதர்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டு காணப்படுகிறார். குவைத்தில் உள்ள இந்தியர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் நல்ல பெயரை பெற்றுள்ளார்.
(Sibi George India Ambassador of Kuwait)
அவர் பதவியேற்ற பின்னர் குவைத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அதற்கு தீர்வு காணும் முயற்சிகள் பல செய்யவும் துவங்கியுள்ளார். அதன் முதல் முயற்சியாக பல்வேறு பிரச்சினைகள் காரணமாக குவைத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூதரகம் வருகின்ற இந்திய தொழிலாளர்களுக்கு தினச மத்திய உணவு வழங்குவதற்கு வழிவகை செய்தார்.
மேலும் குவைத் இந்திய தூதரகம் மற்றும் குவைத்தின் முக்கிய மூன்று இடங்களில் உள்ள இந்திய தூதரகத்தின் கிளை அலுவலகங்களில் சேவைகள் பெற வருபவர்கள். தங்கள் அனுபவங்களை பகிர்வு செய்ய தமிழ்,மலையாளம் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவில் பெருவாரியான மக்களால் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் 15 அம்சம் அடங்கி அனுபவ பகிர்வு அட்டையை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந்திய தூதரகம் சார்பில் வெளியாகியுள்ள மின்னஞ்சல் முகவரில் தொடர்பு கொண்டால் அதற்கு உடனடியாக பதில் கிடைக்க வழிவகை செய்தார். இடையில் வேலைக்கு வந்து பல மாதங்களாக சம்பளம் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் தவித்த தமிழர்கள் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கான வழிவகை செய்தார்.
Editing: Ktpnews Official.