BREAKING NEWS
latest

Monday, November 30, 2020

குவைத்தில் நாளை முதல் அபராதத்துடன் பொதுமன்னிப்பு; உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் முன் அனுமதி பெறவேண்டும்:

குவைத்தில் நாளை முதல் அபராதத்துடன் பொதுமன்னிப்பு; உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் முன் அனுமதி பெறவேண்டும்:


Nov-30,2020

குவைத்தில் நாளை டிசம்பர் 1 முதல் 31வரையில் அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு நடைமுறையில் வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று  உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமன்னிப்பு தொடர்பான சேவைகள் பெறுவதற்கு குடிவரவுத்துறை அலுவலகங்கள் செல்வதற்கு முன்பு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர் வீட்டுத் தொழிலாளராக(Article 20) இருந்து அவருடைய ஸ்பான்சர் குவைத்தி என்றால் குடிவரத்துறை மையங்களுக்கு சென்று நிலையை ஆய்வு செய்த பிறகு அனுமதி பெற வேண்டும் மற்றவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியே விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் பிறகு அனுமதி கிடைக்கும் தேதிக்கு  அங்கு செல்ல வேண்டும். 

முன் அனுமதி பெற பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று https://www.moi.gov.kw/main/

அதில் Eservices > Residence> Illegals-appointments என்ற Option-யில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பொதுமன்னிப்பு பற்றி கூடுதல் விபரங்கள் அறிய பின்வரும் இணைப்புகளில் சென்று பார்க்கவும் 

Link1: https://ktpnews.blogspot.com/2020/11/2400.html

Link 2: https://ktpnews.blogspot.com/2020/11/nov-242020-241120.html

Link 3: https://ktpnews.blogspot.com/2020/11/blog-post_73.html

Link 4: https://ktpnews.blogspot.com/2020/11/blog-post_0.html



Add your comments to குவைத்தில் நாளை முதல் அபராதத்துடன் பொதுமன்னிப்பு; உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் முன் அனுமதி பெறவேண்டும்:

« PREV
NEXT »