குவைத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
நவம்பர்-3,2020
குவைத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
1) பிரதமர் ஷேக் சபா காலித் அல் ஹமாத் அல் சபா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட 34 நாடுகளின் பட்டியலை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தது.
2) நாட்டின் மக்களின் சாதாரண வாழ்க்கையின் 5-வது கட்டத்தை நடைமுறை படுத்தும் திட்டம் தற்போது இல்லை எனவும்.
3) நாட்டில் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து அமைச்சரவை மதிப்பீடு செய்தது
4) குவைத்தில் நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பயணிகளை நிபந்தனை அடிப்படையில் நுழைய அனுமதி வழங்குவதற்கு குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் சமர்பித்த திட்டம் குறித்து விஷயத்தில் அமைச்சரவைக் கூட்டம் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை.
5) மேலும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் ஏற்பாடுகள் குறித்து அமைச்சரவை மதிப்பீடு செய்தது.
6) தேர்தல் வெளிப்படையானதாகவும், பாரபட்சமின்றி நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அனஸ்- அல்-சாலிஹ் கூறியுள்ளார், மேலும் அவர் கூறுகையில் அனைவருக்கும் சம வாய்ப்பும், உரிமையும் உறுதி செய்யும் என்றார்.
7) நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய கட்டம் இது என்று பிரதமர் நினைவுபடுத்தினார்.