குவைத் வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக அழைக்க உள்ளதாக தகவல்; ஒரு வாரத்திற்குள் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும்:
நவம்பர்-13,2020
குவைத்தில் நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகளில் சிக்கித் தவிக்கும் வீட்டுத் தொழிலாளர்களை நேரடியாக திருப்பி அழைக்க சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் செயல்முறையை ஒருங்கிணைக்கிறார்கள் என்று அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிரபல தினசரி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தாயகம் சென்று சிக்கியுள்ள நபர்களில் செல்லுபடியாகும் விசா(Validity Visa) உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற தெரிகிறது. நுழைவு தடை உள்ள நாடுகளில் சிக்கியுள்ள 10,000-ற்கும் மேற்பட்ட வீட்டுத் தொழிலாளர்களுக்கு இது பயனளிக்கும் என்று செய்தித்தாள் தெரிவிக்கிறது. தடை செய்யப்பட்ட 34 நாடுகளில் குறிப்பாக குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் அதிகமான உள்ள இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், ஸ்ரீலங்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
(Note: அரசு எடுத்துள்ள இந்த முடிவு எற்கனவே குவைத்தில் இருந்து விடுமுறை, உள்ளிட்ட காரணங்களால் தாயகம் சென்ற நபர்களுக்கு, புதிதாக விசா வழங்கவில்லை யாரும் கயவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்)
குவைத் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து அவர்கள் திருப்பி அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி திரும்பி குவைத் வருபவர்களுக்கு 7 முதல் 10 நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பத்திரிகை தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த பல மாதங்களாக உள்ள விமான பயண தடை காரணமாக நாட்டில் உள்நாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு உள்ளது என்று தெரிகிறது. தொழிலாளர்களை அழைத்து வரும் இந்த முடிவு ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில் வீட்டுத் தொழிலாளர் விசாவில் வெளியிடங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விமான பயணத் தடையின் காரணமாக தாயகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த முடிவு அவர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும்.
இங்கு வீட்டுத் தொழிலாளர்கள் என்று குறிப்பிடுவது 20 நம்பர் விசா( Visa Number-20) ஆகும்.
Editor: Ktpnews Official